பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் மேல் அவதூறு வழக்கு பதிவு செய்த உதயநிதி ஸ்டாலின்…

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்  மேல் அவதூறு வழக்கு பதிவு செய்த  உதயநிதி ஸ்டாலின்…

சேனல் விஷன் என்ற யூ டியூப் சேனலில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட மதன் ரவிச்சந்திரனுக்கு எதிராக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த அவதூறு வழக்கில், மதன் ரவிச்சந்திரன் என்பவர் தனது சேனல் விஷன் எனும் யூடியூப் சேனலில், மான்கறி vs உதயநிதி ஸ்டாலின்/ திருப்போரூர் துப்பாக்கி சூடு என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தனக்கும், தனது குடும்பத்தாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

தன்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பாக மக்கள் மத்தியில் அவதூறு செய்தி பரப்பும் மதன் ரவிச்சந்திரன் மீது இந்திய தண்டனை சட்டம், அவதூறு சட்டப் பிரிவின் கீழ் விசாரித்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *