சட்டசபை தேர்தல் : முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக இன்று ஆலோசனை

சட்டசபை  தேர்தல் : முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக இன்று ஆலோசனை

தமிழக சட்டசபை தேர்தல் குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று நடைபெறுகிறது.

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் முதற்கட்ட பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.இந்தநிலையில் தமிழக சட்டசபை தேர்தல் குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று நடைபெறுகிறது.

Read more – இன்றைய ராசிபலன் 14.12.2020!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் 4.30 மணி அளவில் இக்கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கூட்டத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர்களின் வழிகாட்டுதலின் கீழ்,அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதனை தொடர்ந்து திமுக கட்சியும் வருகின்ற 20 ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான பரப்புரை வியூகம் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *