அ.தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி : ஜிகே வாசன் பேட்டி

அ.தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி : ஜிகே வாசன் பேட்டி

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.

நெல்லை :

நெல்லையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம்  கூறியதாவது :

அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. பிரதான கட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. அ.தி.மு.க. கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். எந்த குழப்பமும் இல்லை. 

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்தவுடன் அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தொகுதிகளை கேட்டு பெறுவோம்.

Read more – தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் முதலமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்வார் : தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அவர் நல்லவர்களை ஆதரிக்க வேண்டும். பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2,500 வழங்குவதை ஆதரிக்கிறேன். இதனை எதிர்க்கிறவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டதையே காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *