தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட குடிமக்களின் டி.என்.ஏ தகவல்கள்

தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட குடிமக்களின் டி.என்.ஏ தகவல்கள்


அமெரிக்க தனியார் பங்கு வர்த்தக நிறுவனமான பிளாக்ஸ்டோன், சுமார் 400 கோடி டாலர்களுக்கு மரபணு தகவல்களை வேறொரு நிறுவனத்திடம் இருந்து விலைக்கு வாங்கியுள்ளது. இப்போது உலகின் மிகப்பெரிய மனித மரபணு மற்றும் பரம்பரை தகவல்களை கொண்ட நிறுவனமான மாறியுள்ளது பிளாக்ஸ்டோன்.


உலகம் முழுவதும் டி.என்.ஏ ஆய்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் 100 கோடி டாலர் வணிகம் நடக்கிறது. மேலும் பயனாளர்களின் டி.என்.ஏ தகவல்களை சேமிக்க மாதா மாதம் 50 டாலர் சந்தா வசூலிப்பு முறையும் பின்பற்றப்படுகிறது. எனவே, ஒரு தொடர்ச்சியான வருவாயைப் பெற தனியார் பங்கு நிறுவனம் விரும்புவதில் ஆச்சரியமில்லை.


தாங்கள் எந்த வம்சாவளியில் இருந்து வந்தோம்? அவர்களது முன்னோர் யார் என்பதை அறிந்துகொள்ள மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும் தங்களுக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்றும் அதற்கான தீர்வை அறிந்து கொள்ளவும் மக்கள் இந்த டி.என்.ஏ பரிசோதனையை அதிகளவில் மேற்கொள்கின்றனர். அதன்காரணமாகத் தான் இந்த தொழில் பணம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது என தெரியவந்துள்ளது.


தொடர்ந்து இப்படி பொதுமக்களின் தகவல் வாங்கி விற்கப்படும் போது அவர்களுக்கு இதன் மேல் இருக்கும் நம்பகத்தன்மை குறையும். மேலும் ஒருவரது தனிப்பட்ட டி.என்.ஏ வை அவர் அனுமதியின்றி மற்றவர்கள் வாங்கி விற்கும் போது தனி மனிதனுக்கு அவனது டி.என்.ஏ மீது இவ்வளவு தான் உரிமை உள்ளது என்பது வெளிச்சமாகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *