கொரில்லா சேலஞ் – வாய் ஒட்டிக்கொண்ட பரிதாபம்

கொரில்லா சேலஞ் – வாய் ஒட்டிக்கொண்ட பரிதாபம்

டிக்டாக்கில் பெண் ஒருவருக்கு போட்டியாக கொரில்லா க்ளூ ஸ்ப்ரேயை பயன்படுத்தியவரின் வாய் ஒட்டிக்கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் லுசியானாவைச்  சேர்ந்த டெசிகா பிரவுன், தலைமுடியை பராமரிக்க வழக்கமாக உபயோகிக்கும் ஹேர் ஸ்ப்ரேவுக்கு பதிலாக கொரில்லா க்ளூ ஸ்ப்ரேயை பயன்படுத்தியாக தெரிவித்தார். இதனை பயன்படுத்திய பிறகு அவரது முடி தலையிலேயே இறுக்கமாக ஒட்டிக் கொண்டது என கண்ணீர் மல்க தனது சமூகவலைதள பக்கங்களில் தெரிவித்திருத்தார். இதனையடுத்து, லெனின் மார்டின் என்ற அமெரிக்கர் அந்த பெண்ணின் செயல் பொய்யானது என்றும், புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதனை அவர் செய்ததாகவும் கூறியிருந்தார். மேலும், கொரில்லா ஸ்பிரேவை தானும் பயன்படுத்தி அந்த பெண் செய்தது பொய் என நிரூபிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

கொரில்லா ஸ்பிரேவை எடுத்த அவர், வாய் பகுதியில் பேப்பர் கப் ஒன்றை பயன்படுத்தி ஒட்டிக்கொண்டார். அவர் நினைத்ததுபோல் அந்த பேப்பர் கப்பை எடுக்க முடியவில்லை. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னரும் அவரது உதடுகள் இன்னும் ஒட்டியிருப்பதாக கூறப்படுகிறது. கடுமையான வலியால் அவதிப்பட்டு வரும் மார்டின், தன்னுடைய உடல் நலம்பெற அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என சமூகவலைதள பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். கொரில்லா சேலஞ் என்ற ஹேஸ்டேக்கின் கீழ் அவர் பதிவிட்ட இந்தக் கருத்து நெட்டிசன்களிடம் எரிச்சலையும், நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *