ஆர்சனிகம் ஆல்பம்-30 என்ற ஓமியோபதி மருந்து நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரித்து, கொரோனாவை நம்மிடையே வரவிடாமல் தடுக்கும் என்ற கருத்து தற்போது பலர் மத்தியில் பரவி வருகிறது .

கொரோனா தொற்றை வரும்முன் தடுப்பதற்காக இன்னும் தடுப்பூசி, மக்கள் பயன்பாட்டுக்கு வந்தபாடில்லை.இந்த நிலையில், ஓமியோபதி மருந்துகளில் ஒன்றானஆர்சனிகம் ஆல்பம்-30 என்ற மருந்து நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன், கொரோனாவை நம்மிடையே வரவிடாமல் தடுக்கும் என்ற கருத்து தற்போது நிலவி வருகிறது.
மேலும் இதனை குஜராத் அரசு தங்கள் மாநிலத்தில் உள்ள மக்களில் பாதிபேர் இடத்தில் இதை வினியோகம் செய்துள்ளது.சென்ற ஆகஸ்ட் 20-ந் தேதி கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் பற்றி உலக சுகாதார நிறுவனத்திடம் தெரிவித்த விளக்கத்தில் குஜராத் மாநில அரசு இதனை தெரிவித்துள்ளது, அதில் மொத்த மக்கள்தொகை 6.60 கோடி பேர்களில் 3.48 பேருக்கு இந்த மருந்து வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
எனினும் இது கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யும் என்பது இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகவில்லை இன்று விஞ்ஞானிகள் மட்டுமின்றி ஹோமியோபதி மருத்துவர்களும் தெரிவித்துள்ளார்கள், ஆனாலும் குஜராத் அரசு இந்த மருந்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட காலகட்டங்களில் நோய் எதிர்ப்பு மருந்துகள் ஆயுஸ் நிவாரணங்களைப் பயன்படுத்தியவர்கள் 99.69% ஆட்கள் அதற்குப் பின்பு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் தெரியப்படுத்திய குஜராத் மாநில சுகாதார அமைச்சகம், “ஆயுஷ் மருந்துகள் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே ஆயுஷ் சிகிச்சை நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான சிகிச்சை செயல்திறனை மதிப்பிடுவதற்கு ஆராய்ச்சி அமைக்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்தது.

ஆனால் தற்போது கொரோனாவுக்கு எதிராக ஆர்சனிகம் ஆல்பம்-30 ஓமியோபதி மருந்து தடுப்பு மருந்தாக பயன்படுமா என்பது பற்றிய மருத்துவ பரிசோதனை, இதுவரை எங்களுக்கு எந்த முடிவையும் தரவில்லை என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் ஆயுஷ் துறை இயக்குனர் ஆன பாவ்னா படேல் இதைப்பற்றி கூறும்போது,“ஆர்சனிகம் ஆல்பம்-30 மருந்து, நோய் எதிர்ப்புச்சக்தியை பெருக்குகிறது என்பது உண்மைதான் ஆனால், இது தொடர்பான எங்கள் ஆராய்ச்சி இன்னும் முடிக்கப்படவில்லை. எனவே தற்போது இதனை தனியார் துறையின் மருத்துவ பரிசோதனைக்கு செயல்படுத்துவதற்காக ஒப்புதல் அளித்துள்ளோம்” என்றும் அவர் தெரிவித்தார்.




