முகமூடி இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் கை கோர்த்து இசை விழாவில் குதூகலிக்கும் காட்சி சீனாவின் வ்வுஹான் (wuhan) நகரத்தில் நடந்தது! எப்படி சாத்தியம்?
கொரோனா முதன்முதலில் பரவி மக்கள் அவதிக்குள்ளான அதே வ்வுஹான் நகரம் இன்று எந்த பாதிப்பும் இல்லாதது போன்றே இயங்கி வருகிறது.

ஜனவரி மாதம் 23ஆம் தேதி முடக்கப்பட்டாலும் மார்ச் மாதமே ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்கு ஒருவர் என்று தொடங்கி கடைகள், பூங்காக்கள் என்று அந்நகரம் மீண்டும் இயங்க ஆரம்பித்தது.
ஏப்ரல் மாதம் முழுவதுமாக ஊரடங்கு நீக்கப்பட்டது. எனினும் மே மாதம் 12 பேருக்கு கொரோனா உறுதியானது. பத்தே நாட்களில் 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா சோதனை என்ற மிகப்பெரிய இலக்கை ஏற்று நடத்தியது சீனா.
நோய்ப்பரவல் வெற்றிகரமாக குறைந்தது. ஜூன் மாதம் மேலும் கடைகள், இரவுச் சந்தைகள் திறக்கப்பட்டன. ஒரு மாதம் கழித்து மக்கள் ஆங்காங்கே ஒன்றுகூட ஆரம்பித்தனர். திரை அரங்குகள், அருங்காட்சியகங்கள் தொடங்கின. பெரிய அளவில் மக்கள் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.

பெரிய அளவில் நடந்த இவ்விழாவின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி மக்களுக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தியது. கடந்த மே மாதம் முதல் இந்த புதிய கொரோனா பாதிப்புகளும் உறுதி செய்யப் படவில்லை என்றாலும் நோய்ப் பரவ வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்ப் பிரிவு துணைப் பேராசிரியர் சஞ்சய ஸேநாயகே (Sanjaya Senanayake) தெரிவிக்கிறார்.
கொரோனா நோய் முற்றிலுமாக நீங்கும் வரை மக்கள் கவனத்துடன் இருப்பதே நல்லது.




