இந்த பொருட்கள் இருந்தால் போதும்; முடி உலர்ந்து உடையும் கவலை இனி இல்லை
மழைக்காலம் என்றாலே தலைமுடிக்கு தொந்தரவுகள் அதிகம். ஈரப்பதம், எளிதில் உடையும் தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புண்டு. அதற்காக மழைக்காலத்திற்கு ஏற்றவாறு பொருட்கள் உபயோகித்தால் தலைமுடியை மிருதுவாக, அடர்த்தியாக பராமரிக்க முடியும்.

- எண்ணெய்
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய் வகைகளை தரமாக செக்கில் தயார் செய்து, சூடாக்கி தலையில் தேய்த்து வர, தலைமுடி மிருதுவாக, உடையாமல் இருக்கும். முடி கொட்டுவது குறையும்
- சிலிக்கோன் சேர்க்கப்பட்ட ஷாம்பூ/கண்டிஷனர் (Shampoo /serum /Conditioner with silicone)
கடைகளில் தலைமுடிக்கான பொருட்கள் வாங்கும்போது சிலிக்கோன் சேர்க்கப்பட்டது வாங்கினால், முடி ஒன்றோடு ஒன்று சேர்ந்து சிடுக்காகாமல் மிருதுவாக இருக்கும். தலைமுடிக்கு பளபளப்பு தரும்.
- ஜின்க் பைரித்தின் (Zinc pyrithione)
மழைக்காலத்தில் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்கு ஏற்ற பொருளாகும். இதை, எப்போதும் பயன்படுத்தும் ஷாம்பூ, கண்டிஷனர் இவைகளுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால் நன்மை கிடைக்கும்.
இந்த பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டால் மழைக்காலத்தில் தலைமுடியைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்




