தளர்வுகள் என்பது வாழ்வாதாரமானது,முக கவசம் அணிவதில் தளர்வுகள் கிடையாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை:
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தளர்வுகள் என்பது வாழ்வாதரமானது,முக கவசம் அணிவதில் தளர்வு கிடையாது. பொதுமக்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.மேலும் காய்ச்சல், வாந்தி போன்ற அறிகுறி இருந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆம்புலன்ஸ்கள் 1005 ஏற்கனவே இயங்கி வருகின்றனர். புதிதாக 500 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. கொரோனா நோயாளிகளுக்காக நடமாடும் ஆம்புலன்ஸ்களில் அவசர சிகிச்சை பிரிவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.




