நேபாள தலைநகர் காத்மாண்டுவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது.
2020 அதன் கோர ஆட்டத்தை இன்னும் தொடர்ந்து வருகின்றது. தற்போது நேபாள நாட்டில் உள்ள காத்மாண்டுவில் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.4ஆக பதிவாகி உள்ளது. இத்தகவலை தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை (புதன்கிழமை) சுமார் 05.04 மணிக்கு தலைநகர் காத்மாண்டுவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கமானது நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே 50 கிமீ தொலைவில் மையமாக வைத்து உண்டானதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிகாரபூரவ தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.