காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, கோவில், புதுப்பேட்டை,மதுர உள்ளிட்ட படங்களில் நடித்த சோனியா அகர்வால் டைரக்டர் நடிகர் தனுஷின் அண்ணனான செல்வராகவனை திருமணம் செய்து பின்னர் விவகாரத்து பெற்றார்.
தற்போது சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர் அளித்துள்ள சோனியா அகர்வால் ஒரு பேட்டியில் திரிஷா, நயன்தாராவை சாடியுள்ளார் அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
’நான், திரிஷா, நயன்தாரா மூணு பேரும் ஒரே வயதுக்காரர்கள். 82-83 ஆம் ஆண்டில்தான் பிறந்தவர்கள். ஆனால் சிலர் என்னிடம் `நீங்க அம்மா கேரக்டர்ல நடிப்பீங்களா’னு கேட்டுட்டு வரும்போது எனக்கு ஆச்சர்யமா இருக்கு. இதே கேள்வியை நீங்க திரிஷாகிட்டயோ, நயன்தாராகிட்டயோ கேட்பீங்களானு கேட்டிருக்கேன்.
ஒருவேளை நான் வயசானவ மாதிரி மாறியிருந்தாலோ, உடம்பை பிட்டா வெச்சுக்கலைன்னாலோகூட ஓகே. நான் இளமையாதான் இருக்கேன். உடற்கட்டை பராமரிக்கிறேன். அப்படியிருக்கும்போது ஏன் அம்மா கேரக்டருக்கு என்னை யோசிக்கிறீங்க? நானும் ராதிகா மேடம், குஷ்பூ மேடம் வயசை எட்டினதும் அம்மா கேரக்டரில் நிச்சியம் பண்றேனே. இப்ப எனக்கு அதுக்கான வயது இல்லை.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.