Saturday, March 7, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

பண்டிகைகள் கொண்டாடும் முறை: மத்திய அரசு அறிவிப்பு

October 7, 2020
அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம் வரையிலான 3 மாத காலத்தில் வரக்கூடிய பண்டிகைகளை எப்படி கொண்டாடுவது என்பது குறித்த வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
centralgovernment

பண்டிகை காலம் தொடங்குகிறது. இந்த மாதம் துர்கா பூஜை, தசரா, விஜயதசமி, அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை, டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை என பண்டிகைகள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த காலகட்டத்தில் பண்டிகைகளை கொண்டாடுவது என்பது சவாலாக உள்ளது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிமுறைகளின் முக்கிய அம்சங்கள்:

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்புகள் 2021

நியூ மங்களூர் போர்ட் டிரஸ்ட் நிறுவனத்தில் மாதம் ரூ.50000-160000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2021

பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் விதிப்பு : தமிழக அரசு வெளியீடு

பண்டிகை கொண்டாட்டங்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளுக்குள் மட்டுமே கொண்டாட்டங்களை வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர வெளியே வரக்கூடாது.

  • 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நாள்பட்ட வியாதிகள் உடையவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே தங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • பண்டிகை காலத்தில் பதிவு செய்யப்பட்ட பக்தி இசையும், பாடல்களும் இசைக்கப்படலாம். ஆனால் பாடகர்கள் அல்லது பாடகர் குழுக்களுக்கு அனுமதி இல்லை.
  • தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டி இருப்பதை கருத்தில் கொண்டு, கொண்டாட்ட இடங்கள், பொதுமக்கள் பார்வையிடக்கூடிய அனைத்து இடங்களிலும் போதுமான தரை பரப்பையும், சரியான அடையாளங்களையும் கொண்டிருக்க வேண்டும். தொற்று அறிகுறியற்ற பார்வையாளர்கள், ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
  • பார்வையாளர்களும், பணியாளர்களும் முக கவசம், முக ஷீல்டு அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளியை பராமரிக்க வேண்டும். அதற்கான அடையாளங்கள் வரைந்திருக்க வேண்டும்.
  • பேரணிகள், ஊர்வலங்கள், சிலை கரைப்பு போன்றவற்றில் மக்கள் பங்கேற்பதில், நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கை வரம்பினை மீறக்கூடாது. தனி மனித இடைவெளி பின்பற்றப்படுவதோடு, முக கவசம் அணிந்திருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
  • பேரணிகள், ஊர்வலங்கள், சிலை கரைப்பு போன்றவற்றுக்கான இடங்களை அடையாளம் காண வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில்தான் மக்கள் வரவேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • நீண்ட தூரங்களுக்கு பேரணி, ஊர்வலம் நடத்துகிறபோது, ஆம்புலன்ஸ் சேவை உடன் இருக்க வேண்டும்.
  • கண்காட்சிகள், பூஜை பந்தல்கள், ராம்லீலா போன்ற நிகழ்வுகள் நாள் கணக்கில், வாரக்கணக்கில் நீடிக்கும் நிகழ்வுகள், பந்தல்கள், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களை கொண்டே நடத்த போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • பந்தல்கள், உணவு பரிமாறும் கூடங்கள் போன்றவற்றில் இருக்கைகள் தனிமனித இடைவெளியை பின்பற்றி அமைக்க வேண்டும். கடைகள், ஸ்டால் கள், சிற்றுண்டி கூடங்கள் ஆகியவற்றில் எல்லா நேரங்களிலும் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.
  • சமூக சமையலறைகள், அன்னதான நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் தனிமனித இடைவெளியை பராமரிக்க வேண்டும்.
  • நாடக மற்றும் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள், மேடை கலைஞர்களுக்கும் பொருந்தும்.
  • கொண்டாட்ட நிகழ்விடங்களில் துப்புரவு பணியாளர்கள், வெப்ப பரிசோதனையாளர்களுக்கு ஏற்பாடு செய்வதுடன், தரையில் தனி மனித இடைவெளி அடையாளங்களை வரைந்திருக்க வேண்டும்.
  • யாரும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர் என கண்டறியப்பட்டால், அந்த வளாகத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • தனிமனித இடைவெளியை பின்பற்றுவதையும், முக கவசம் அணிவதையும் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்.
  • யாரும் எச்சில் துப்பக்கூடாது.
  • அனைத்து கொண்டாட்ட நிகழ்வுகளிலும் சுகாதார அவசர நிலைகளுக்கு செல்வதற்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • உள்ளூர் நிலைமைக்கு ஏற்பவும், மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ள வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு ஏற்பவும் தகுதிவாய்ந்த உள்ளூர் நிர்வாகம் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதற்குமான 5-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தபோது, வரும் 15-ந் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் இயங்கலாம் எனவும் அறிவித்தது.

அதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர், “கடந்த 7 மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. வருகிற 15-ந் தேதி முதல் அவற்றை திறக்கலாம். மக்களின் பாதுகாப்புக்காக இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுகிறோம்” என்று அவர் கூறினார்.

வழிகாட்டும் நெறிமுறைகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  • தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும். ஒரு இருக்கை விட்டு அடுத்த இருக்கையில் பார்வையாளர்கள் அமர வேண்டும். காலியாக விடப்படும் இருக்கைகளில், ‘அமரக்கூடாது’ என்று எழுதி வைக்க வேண்டும்.
  • பார்வையாளர்கள் இடையிடையே எழுந்து செல்வதை தவிர்க்க வேண்டும். அரங்குக்குள் உணவுப்பொருட் களை வினியோகிப்பது தடை செய்யப்படும். இடைவேளையின்போது, பொது பகுதிகள், லாபிகள், கழிவறைகள் ஆகிய இடங்களில் கூட்டம் சேருவதை தடுக்க வேண்டும்.
  • உணவுப்பொருள் விற்கும் இடத்தில் ஆன்லைன் பரிமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும். பாக்கெட் உணவுப்பொருள் மற்றும் பானங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • ‘ஆரோக்ய சேது’ செயலி பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.
  • தியேட்டருக்குள் போதிய காற்றோட்டம் இருக்க வேண்டும். ஏ.சி.யை 23 டிகிரி செல்சியசுக்கு மேல் வைக்க வேண்டும்.
  • பார்வையாளர்கள் காட்சியின் இறுதிவரை முக கவசம் அணிந்திருக்க வேண்டும். திரையரங்குக்கு வெளியே காத்திருக்கும்போது, 6 அடி இடைவெளியை பராமரிக்க வேண்டும்.
  • நுழைவாயிலில் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். கொரோனா அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும். நுழைவாயிலில் கைகழுவ கிருமிநாசினி அளிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு காட்சி முடியும்போதும் அரங்குக்கு உள்ளேயும், கழிவறையிலும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். இதற்காக, அடுத்த காட்சி தொடங்குவதற்கு போதிய இடைவெளி அளிக்க வேண்டும்.
  • பன்னடுக்கு (மல்டிபிளக்ஸ்) தியேட்டர்களில், ஒவ்வொரு திரையின் இடைவெளி நேரமும், காட்சி முடிவடையும் நேரமும் ஒன்றுக்கொன்று குறுக்கிடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • திரையரங்கினுள் நுழையும் வழியையும், வெளியேறும் வழியையும் குறியீடுகளால் குறிக்க வேண்டும்.
  • பன்னடுக்கு தியேட்டர்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவதை ஊக்குவிக்க வேண்டும். ஒற்றை தியேட்டர்களில் டிக்கெட் கவுண்ட்டர்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மீண்டும் அமலாகிறது 2வது முன்பதிவு அட்டவணை தயாரிக்கும் முறை!

Next Post

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் :எப்போது தொடங்குகிறது?

Next Post

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் :எப்போது தொடங்குகிறது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version