ம.நீ,மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று தொடங்கியது.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கி இரண்டு வருடங்கள் ஆகிறது.இக்கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களைவிட அதிக சதவீத ஓட்டுகளைப் பெற்றனர்.
இதற்கு நடிகர் கமல்ஹாசன் மக்கள் மற்றும் சமூக நலத்தின் மீது காட்டிய அக்கறை என்றே எடுத்துக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி தன்னை டுவிட்டரில் அரசியல் செய்பவர் என்று கூறிய குற்றச்சாட்டுக்கு புயலின்போது போதிய நிவாரணம் செய்து களத்தில் நின்று உதவினார்.
இந்நிலையில் அடுத்தவரும் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது எனவே அதற்காக மக்கள் நீதி மய்யம் தயாராகிவருகிறது.
எனவே இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியில் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், அக்கட்சி வரும் தேர்தலில் கூட்டணியா இல்லை தனித்துப் போட்டியா என்பது முடிவாகும் என்று தெரிகிறது.