புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக அறிவிக்க பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு எனவும், வேலூர் மாவட்டத்தில் இருந்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் எனவும், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து திருநெல்வேலி, தென்காசி எனவும் பிரிக்கப்பட்டது. எனவே தமிழ்நாட்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது.
ஏற்கெனவே உள்ள 32 மாவட்டங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், புதியதாக பிரிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு தேர்தல் அதிகாரி அறிவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் தற்போது உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தனித் தேர்தல் பிரிவு நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 13 AA படி, மாவட்டங்களின் ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் பதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.




