1944-ஆம் ஆண்டிற்குப் பிறகு, நாளை இரவு வானில் ப்ளூ மூன் தோன்ற உள்ளது. இந்தியாவை பொறுத்த வரை நாளை இரவு 8 மணிக்கு மேல் ப்ளூ மூன் தெரியும் என்று, நேரு கோளரங்கத்தின் இயக்குனர் அரவிந்த் பரஞ்ச்பை கூறியுள்ளார்.
பொதுவாக, ஒவ்வொரு மாதமும் ஒரு பௌர்ணமி தான் வரும். ஆனால், ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை, ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி வரும். அப்படி இரண்டாவதாக தோன்றும் முழு நிலவு தான், ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக வானத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் வழக்கமான இடைவெளியில் தான் நடக்கும். இதுபோன்று நடக்கும் வான நிகழ்வு, பெரும்பாலும் உலகின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும். ஆனால், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ப்ளூ மூன் (Blue Moon), உலகெங்கிலும் உள்ள எல்லா இடங்களுக்கும் தெரியும். இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு நடக்கவுள்ள அரிய நிகழ்வானது, கிட்டத்தட்ட 76 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவிருக்கிறது. கடைசியாக 1944-ஆம் ஆண்டு தான் இந்த ப்ளூ மூன் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக செப்டம்பர் 30, 2050-ல் தான், 30 நாட்களுக்குள் வரும் ப்ளூ மூனை காண முடியும்.
இதுகுறித்து நேரு கோளரங்கத்தின் இயக்குனர் அரவிந்த் பரஞ்ச்பை கூறுகையில், அக்டோபர் மாதத்தின் முதல் பௌர்ணமி அக்டோபர் 2-ஆம் தேதி அதிகாலை 2.35 மணிக்கு ஏற்பட்டது. இதன்பிறகு, இரண்டாவது பௌர்ணமி நாளை (அக். 31) நடக்கவிருக்கிறது. நாளை இரவு 8.19 மணிக்கு ப்ளு மூன் தெரியும். மேலும், 30 நாட்களில் இரண்டு பௌர்ணமி வருவது பொதுவான விஷயமல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
ப்ளூ மூன் (Blue Moon):
- ஒரு மாதத்தில் வரும் இரண்டாவது பௌர்ணமி தான் ப்ளூ மூன்.
- பெரும்பாலான ப்ளூ மூன்கள் வெளிர் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும்.
- ஒவ்வொரு மாதமும் தோன்றக்கூடிய வழக்கமான பௌர்ணமி போல இது காணப்பட்டாலும், இந்த நிலவானது சுற்றிலும் நீல நிறமாக காட்சியளிக்கும்.