மருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

மருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராம லிங்க தேவர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் உருவ சிலைக்கு இன்று பூஜைகள் நடந்து வருகின்றது. அவரின் பிறந்த நாளான இன்று தேவர் ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை கோரிப்பாளைத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு இன்று ஓ.பன்னீர் செல்வம் அவர்களும் இன்று அவரின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்களும் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் முருதுபாண்டியர் சிலைக்கு மரியாதை செலுத்தியும் முதலமைச்சர் மாற்றும் துணை முதலமைச்சருக்கு வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *