ராகுல் காந்திக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாததால் சோனியா காந்தி மன்மோகன் சிங்கைத் தேர்ந்தெடுத்தார் என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது புத்தகத்தில் கூறி உள்ளார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதியதாக வெளியிட்ட தன் அரசியல் நினைவுக் குறிப்பான “ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்” (The Promised Land)என்ற புத்தகத்தில் இந்திய அரசியல் தலைவர்கள் குறித்து குறிப்பிட்டு உள்ளார். அதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்றவர்கள் பற்றியும் அவர் கருத்து தெரிவித்து உள்ளார். அதில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2009 முதல் 2017 வரை ஆட்சியில் இருக்கும் போது தான் அமெரிக்கவின் அதிபராக இருந்தார் என்பதையும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் அவர் அந்த புத்தகத்தில் 1990 களில் இந்தியா அதிக சந்தை அடிப்படையிலான பொருளாதாரமாக மாறியது, அதனை குறிப்பிட்ட அவர் “இந்தியாவின் பொருளாதார மாற்றத்திற்கான பிரதான காரணமாக பிரதமர் மன்மோகன் இருந்தார் என கூறி உள்ளார்.
அதனை தொடர்ந்து மன்மோகன் சிங்கிற்கு தேசிய அளவில் எந்த விதமான அரசியல் பின்புலமும் கிடையாது என்பதும் சோனியாவின் முடிவுக்கு ஒரு காரணம் என ஒபாமா எழுதியுள்ளார். மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்துவதற்கு அழைப்பு விடுத்ததை பிரதமர் சிங் எதிர்த்தார், ஆனால் அதுவே அவரின் அரசியல் வாழ்க்கைக்கு சேதத்தை ஏற்படுத்தியது.
முஸ்லீம்-விரோத உணர்வு அதிகரித்து வருவது பிஜேபி போன்ற காட்சிகளை வலுப்படுத்துமோ எனவும் அவர் அஞ்சினார் என ஒபாமா தன் புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
இந்தியாவின் அரசியல் இன்னும் மதம், குலம் மற்றும் சாதியைச் சுற்றியே இருக்கின்றது என்றும் குறுங்குழுவாத பிளவுகளை முறியடிப்பதில் நாட்டின் முன்னேற்றத்தின் ஒரு அடையாளமாக அழைக்கப்பட்ட டாக்டர் சிங் பிரதமராக உயர்ந்தது உண்மையில் பெரிய விஷயம் என கூறி உள்ளார். முன்னாள் பிரதமர் சிங்கின் வீட்டில் ஒரு முறை சாப்பிட்ட விருந்தையும் ஒபாமா நினைவு கூர்ந்தார். இரவு விருந்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதையும் தன் புத்தகத்தில் நினைவு படுத்தினார்.