பல் மருத்துவத்திற்காக கலந்தாய்வு தற்போது தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான மருத்தவ கலந்தாய்வு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதில் முதல் கட்ட கலந்தாய்வு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நடந்தது. தற்போது தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பல் மருத்துவ படிப்பிற்கான பொதுப்பிரிவு இடங்களுக்கான மாணவ சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியுள்ளது. சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடந்த பொதுப்பிரிவினற்கான மருத்தவ படிப்பு மாணவ சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவ கல்வி இயக்குனர் பார்வையிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது யாதெனில் தமிழகத்தில் 3848 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 1136 பல் மருத்துவ படிப்பிற்கான இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. தினமும் காலை ஒன்பது மணி பதினோரு மணி மற்றும் இரண்டு மணி என பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மேலும் இதுவரை கலந்தாய்வில் தரவரிசை பட்டியலில் படி 361 பேருக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளது. மேலும் முதல் பதினைந்து இடத்தை பிடித்த மாணவர்கள் அகில இந்திய பிரிவின் கீழ் கல்லூரியில் சேர்ந்து விட்டதால் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 41 கல்லூரிகள் மற்றும் 20 பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களை நிரப்புவதற்காக இந்த கலந்தாய்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.