“மன் கி பாத்” என்னும் வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

புதுடெல்லி:
கடந்த 2014 ல் பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் “மன் கி பாத்” என்ற நிகழ்ச்சியின் மூலம் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி வாயிலாக இந்திய நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், இந்த மாதத்திற்கான “மன் கி பாத்” வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு உரையாற்ற இருக்கிறார்.தற்போது இந்திய நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்துகொண்டே வருகிறது.அதனைக்குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களுடன் உரையாடுகிறார். பண்டிகை காலம் தொடர்ந்து அடுத்தடுத்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி பேசும் இன்று இந்த வானொலி உரையானது 71 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.




