சென்னையில் ஆண்களுக்கான கருத்தடை பிரச்சார வாகனத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆண்களுக்கான கருத்தடை
சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நலக் கருத்தடை சிறப்பு முகாம்கள் கடந்த 28-ந் தேதி முதல் வரும் 4-ந் தேதி வரை ராயபுரம், திரு.வி.க. நகர் மற்றும் அடையாறு மண்டலங்களில் நடைபெற உள்ளது. நவீன கருத்தடை செய்துகொள்ளும் நபர்களுக்கு ரூ.1100/- மற்றும் ஊக்குவித்து அழைத்து வரும் நபருக்கு ரூ.200/-ஐ அரசு ஊக்கத்தொகையாக வழங்குகிறது.

பிரச்சார வாகனம்
இம்முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் விழிப்புணர்வு வாகனங்களை ஆணையர் பிரகாஷ், இன்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.




