பாஜக ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் நடக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் 20 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தையில் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.மத்திய அரசுக்கு எதிராக இந்த போராட்டத்தினை மேலும் தீவிர படுத்துவதற்காக விவசாய அமைப்பினர்களின் தலைவர்கள் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.
இந்தநிலையில்,செய்தியாளர்களை சந்தித்த மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: விவசாயிகள் நடத்தும் இந்த போராட்டமானது நியமானவை.இந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயலும், வேளாண் அமைச்சர் தோமரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இந்த பேச்சுவார்த்தையில் என்னையும் அழைத்தால் நானும் பங்குகொண்டு ஒரு நல்ல தீர்வை கொண்டுவர முயற்சிப்பேன்.
Read more-20 வது நாளாக தொடரும் விவசாய போராட்டம் : நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்
பாஜக அரசு விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் மசோதாவை கொண்டுவந்துள்ளது.புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் நடக்காது என்று தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.