சபரிமலையில் 5,000 பக்தர்கள் அனுமதி குறித்து கேரள அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சபரிமலை:
கொரோனா பரவல் காரணமாக சபரிமலை திருவிதாங்கூர் தேவஸ்தானம் பல கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றிவருகிறது.கேரளா அரசின் உத்தரவின் பெயரில் கடந்த 2 வார காலமாக சபரிமலையில் தரிசனத்திற்காக பக்தர்கள் வார நாட்களில் 2 ஆயிரம் நபர்களும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் நபர்களும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் முன்பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம்,அவ்வாறு தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி வழங்க படாது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்தது.
ஐயப்ப சாமியை தரிசிக்க நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதாலும்,ஆன்லைனில் முன்பதிவு செய்யாத ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய படை எடுத்து வருவதாலும் அவர்கள் அனைவரையும் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்பினர்.இந்த நிலையில் ஐயப்ப பக்தர்களின் நிலையை கருத்தில் கொண்டு தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.இதையடுத்து டிசம்பர்.20 முதல் முதல் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக கேரள அரசு தரப்பில் எந்த வித முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. அரசின் உத்தரவு அளித்த பின்னர், சபரிமலை கோவிலில் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும்,அதற்கு முன்னதாக ஆன்லைன் முன்பதிவு குறித்த அறிவிப்பு வெளியாகும் .பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Read more – தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மக்கள் திமுகவை நிராகரிப்பார்கள் : பொன்.ராதாகிருஷ்ணன்
ஐயப்ப பக்தர்களை அனுமதிக்கும் படும்போது,கொரோனா கட்டுப்பாடுகளில் எந்த தளர்வுகள் இல்லை என்றும்,முகக்கவசம் அணிதல், கொரோனா இல்லா நெகட்டிவ் சான்றிதழ், சன்னிதானத்தில் தங்குவதற்கு தடை உள்ளிட்ட அனைத்தும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.