குளிர்காலத்தில் வீடற்ற பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக “உல்மர் குடில்கள்” உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி:
ஜெர்மனி நாட்டில் தற்போது குளிர் மற்றும் அதிக பனிப்பொழிவதால் வீடற்றவர்கள் தங்கிக்கொள்ள ‘உல்மர் நெஸ்ட்’ என்று அழைக்கப்படும் குடில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மரம் மற்றும் எஃகு ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்ட இந்த உல்மர் குடில்கள் பூங்கா மற்றும் பிற பொது இடங்களில் மக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
ஜெர்மனியில் வீடற்றவர்கள் காற்று மற்றும் குளிரில் இருந்து பாதுகாப்பதற்காக படுக்கைகள் வெப்ப காப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. அந்த படுக்கையானது இரண்டு நபர்களின் பயன்பாட்டிற்கு போதுமானவையாக இருக்கும். மேலும், இந்த குடில்களில் கேமராக்கள் எதுவும் இல்லை, அவை பயன்பாட்டில் இருக்கும்போது தானியங்கி சென்சார்கள் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
Read more – கடலுக்கு அடியில் குவிந்து கிடந்த முகக்கவசங்கள் : இணையத்தில் வைரலான வீடியோ பதிவு
இந்த திட்டத்தினை பயன்பாட்டிற்கு கொண்டுவந்த நபர்கள் தெரிவிக்கையில், சில தாமதங்களுக்கு பிறகு, வானிலை மோசமான நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தவுடனே இந்த குடில்களை உருவாக்கிவிட்டோம். துரதிர்ஷ்டவசமாக கொரோனா காரணமாக தாமதமாக இத்திட்டம் தொடங்கப்பட்டாலும், தற்போது மிகவும் குளிர்ந்த இரவுகளில் வீடற்றவர்களுக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.