தமிழகத்தில் 16 ஜோடி தனியார் ரயில்கள் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் பெற மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்து வருகிறது.
சென்னை :
தமிழகம் மற்றும் அதை சுற்றியுள்ளபகுதிகளில் 16 ஜோடி ரயில்கள் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.இந்தியாவில் ஏற்கனவே அகமாதபாத்- மும்பை, டெல்லி- லக்னோ இடையே தனியார் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு வழிதடத்தில் இயக்கப்படும் ரயில்கள் மூலம் அதிக லாபம் ஈட்டப்படுவதால் கூடுதல் வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு 6 ஜோடி ரயில்களும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வழியாக பிற மாநிலங்களுக்கு 4 ஜோடி ரயில்களும், தமிழகத்தில் 6 ஜோடி ரயில்களும் இயக்க மத்திய திட்டமிடப்பட்டுள்ளது.
Read more – விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய சாதனை : ஒரே நேரத்தில் செலுத்தப்பட்ட 143 செயற்கை கோள்கள்
தமிழகத்தில் மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, கன்னியாகுமரி போன்ற முக்கிய மாவட்டங்களில் இனி தனியார் ரயில்கள் இயக்கப்படும் என்று விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.