சூர்யா படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார்.
‘சூரரைப்போற்று’ வெற்றிக்கு பிறகு சூர்யா தனது 40வது படத்திற்காக இயக்குனர் பாண்டிராஜ்ஜூடன் இணைகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
படத்திற்கு இசையமைக்கிறார் இமான். இந்த செய்தியை சன்பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று இமானின் பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து இந்த செய்தியை மகிழ்ச்சியாக சூர்யா ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
READ MORE- ‘மாஸ்டர்’ ஓடிடி ரிலீஸ் எப்போது?
சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் ‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் உருவாகும் ‘அண்ணாத்த’விற்கும் இமான்தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.