ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் 10-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதுகுறித்து விசாரிக்க ஆறுமுசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. ஜனவரி 24-ம் தேதியுடன் இந்த ஆணையத்தின் பதவிக்காலம் முடிந்தது. இந்த நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு ஆணையத்தை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2017 செப்டம்பர் மாதம் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. 3 மாதத்திற்கு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஏராளமான மருத்துவர்கள், செலிவியர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் போயஸ் தோட்ட ஊழியர்கள் என தொடர்ந்து 154 பேரிடம் விசாரணை நடந்தும் இதுவரை ஆறுமுகமுசாமி ஆணையத்தால் ஜெ மரணம் குறித்து இன்னும் சரியான அறிக்கை தர முடியவில்லை.