மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் போட்ட குத்தாட்டத்திற்காக அந்த படத்தின் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு..
மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது, நடன நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட தெறி மற்றும் விக்ரம் வேதா படங்களின் பாட்டுக்கு நடனம் ஆடினர். ஆனால் அந்த பாடல்களை அனுமதி பெறாமல் பயன்படுத்திய புகாரின் பேரில் சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில் சிறுவர் நடனக் குழுவினரும், நடிகை சிம்ரன், நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்டோர் தனித் தனியாக திறமை காட்டி நடனம் ஆடினர். இந்த நடனத்தில் விஜய் படத்தில் இருந்தும் விஜய் சேதுபதி நடித்த படத்தில் இருந்தும் பாடல்களை அடுத்தடுத்து ஒளிபரப்பி குத்தாட்டம் போட்டனர்.
இதில் இடம் பெற்ற சில பாடல்கள் திங்க் மியூசிக் நிறுவனத்திற்கு சொந்தமானது. தங்களிடம் காப்புரிமை உள்ள பாடல்களை தங்கள் அனுமதியில்லாமல் வருமான நோக்கமுள்ள பொது நிகழ்ச்சியில் பயன்படுத்தியதோடு, இது குறித்து விளக்கம் கேட்டு அனுப்பபட்ட நோட்டீசுக்கும் உரிய பதில் அளிக்கவில்லை என்று, மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்.பி. பிலிம் கிரியேட்டர்ஸ் மீது திங்க் மியூசிக் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மீது காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னல் காப்புரிமை மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி நீதிமன்றத்தை நாடியபோது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்ட ன்னரும் போலீசார் வழக்கு பதிவு செய்ய வில்லை. இந்த நிலையில் மாஸ்டர் படம் வெளியாகி 25 நாட்கள் கழித்து சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்.பி .பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மீது அறிவுசார் சொத்துரிமை மற்றும் காப்புரிமை பிரிவு சிபி சிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.