புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப் போவது இல்லை என்று முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது என்றார். இந்திய அரசியல் சாசன சட்டப்படி புதுச்சேரி அரசு செயல்படும்” என்ற அவர் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று உறுதிப்படக் கூறியுள்ளார். புதுச்சேரியில் அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் எம்.எல்.ஏ ஜான்குமாரும் ராஜினாமா கடிதம் அளித்தார். 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால் தற்போதைய நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி புதுச்சேரி ஆளுங்கட்சி அமைச்சரவை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியிட்ட நிலையில், அம்மாநில முதல்வர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.