1000 ரூபாய் நோட்டை போல் எடப்பாடி பழனிசாமியை செல்லா காசாக்குங்கள் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தற்போது திமுக வேட்பாளருமான வில்வநாதனை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது ;
புதிய இந்தியா பிறக்கப் போகிறது என்று இந்திய பாரத பிரதமர் 3 ஆண்டுகளுக்கு முன்பு 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தாரே, அப்பொழுது பிறந்ததா புதிய இந்தியா ? லட்சக்கணக்கான பேர் ஏடிஎம் வாசலிலும் வெயிலில் நின்று தன் சொந்த பணத்தை எடுக்க உயிரை விட்டார்கள் என்று கூறினார்.
Read more – 5 மாநிலங்களை சுற்றுப்போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. இதுவரை 331 கோடி பறிமுதல் செய்த அதிகாரிகள்..
அப்பொழுது தீடிரென கூட்டத்தில் இருந்து ஓடி வந்த தொண்டர் ஒருவர், உதயநிதி ஸ்டாலினிடம் செல்லாத 100 ரூபாயை நீட்ட அதைப்பெற்றுக்கொண்ட அவர், இந்த காசு எப்படி செல்லாதோ அதேபோன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை செல்லாக்காசாக ஆக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.