ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் ’அசுரன்’ விருதுகளை வேட்டையாடியுள்ளது.
கடந்த 2019 ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான தனுஷின் சிறந்த நடிப்பிற்காக பாராட்டுகளையும் குவித்தது. தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம், பசுபதி உள்ளிடோர் நடிப்பில் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்தார்கள். எழுத்தாளர் பூமணியின் ’வெக்கை’ நாவல் கதையை திரையில் காட்சிகளாக வெற்றி மாறன் ரசிக்க வைத்தார்
மிக முக்கியமாக சிறந்த தமிழ் மொழி படமாக தேசிய விருதுக்கு “அசுரன்” தேர்வானது. நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.தெலுங்கிலும் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் ’நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இந்நிலையில், ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரில் நேற்றும்,நேற்று முன்தினமும் நடந்த ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் அசுரன் திரையிடப்பட்டது.
இவ்விழாவில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கலை இயக்குநர் உள்ளிட்டப் பிரிவுகளில் அசுரன் படம் விருதுகளை அள்ளியுள்ளது.கைதி, சில்லுக் கருப்பட்டி உள்ளிட்டப் படங்களுக்கும் விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.