மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் உள்ள துரைசாமி நகரில் வாகை ரகம் மரம் உள்ளது . இந்நிலையில் திடீரென மரத்தில் தண்ணீர் வரத் தொடங்கியது .அப்பகுதி மக்கள் பெரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டுனர் .பிறகு அருகாமையில் இருந்த அக்கம்பக்கத்தினர் அந்த தண்ணீரை வாளி வாளியாக பிடித்து மகிழ்ந்தார்கள் . அதேபோல மரத்திலிருந்து எப்படி தண்ணீர் வரும் என்ற பிரமிப்போடு அக்கம்பக்கத்து தெருவைச் சேர்ந்தவர்களும் பார்த்து சென்றனர்
சிறிது நேரம் கழித்து தண்ணீர் தானாகவே நின்று போனது இது ஒரு அதிசய நிகழ்வாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் .




