கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில், 2020ம் ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேசிய மகளிர் ஆணைய தலைவரான ரேகா சர்மா வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் 2020-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 13,618-ஆக பதிவாகியுள்ள நிலையில், நடப்பாண்டில், 19,953 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 46% அதிகமாகும்.
நடப்பாண்டில் அதிகபட்சமாக, ஜூலை மாதம் 3,248 புகார்கள் பதிவாகியுள்ளன. உத்திரபிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 10,084 புகார்களும், டெல்லியில் 2,147 புகார்களும், ஹரியானாவில் 995 புகார்களும், மகாராஷ்டிராவில் 974 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.