நீட் தேர்வு பயத்தால் நேற்று மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாக பேரவையில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்நிலையில், இன்று காலை அவைக் கூடியதுடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு சில கேள்விகளை முன்வைத்தார்.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்ட நிலையில், அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.




