மாற்று திறனாளிகள் மற்றும் நடமாட முடியாதவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் ஒரே ஆயுதமாக தடுப்பூசி மட்டுமே இருக்கிறது இதற்கு வேறு மருந்துகளே இல்லை. இதனால் இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், மாற்று திறனாளிகளுக்கும் நடக்க முடியாதவர்களுக்கும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் அவர்கள் நேற்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடமாட முடியாதவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், 18 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை 66 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியையாவது எடுத்துக் கொண்டு உள்ளதாகவும், 23 சதவீதம் பேர் இரண்டாவது டோஸும் எடுத்து கொண்டுள்ளதாகவும், இது தடுப்பூசி செலுத்தப்படுதலின் இந்தியாவின் முக்கியமான மைல்கல் எனவும் தெரிவித்துள்ளார்.