மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றி அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப் படாத விவகாரம், உடனடியாக தலையிட்டு பிரச்சனையை தீர்க்குமாறு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடிதம்
டெல்லி, இதுதொடர்பாக ஜோதிமணி எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்தவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் தங்களது ஆட்சியின் பொழுது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உரிய ஊதியம் வழங்கப்பட்டுவிடும் எனவும் அதனால் மக்கள் அந்த பணத்தை கொண்டே உணவு உள்ளிட்டவற்றை சரி செய்து கொள்வார்கள் என்றும் ஆனால் தற்பொழுது இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படாததால் கிராமப்புற பகுதிகளில் இருக்கக்கடிய மக்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாகி வருவதாக கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகம் மட்டுமல்லாமல் இன்னும் 20 மாநிலங்களிலும் இதே நிலைமை நீடிப்பதாக தெரிகிறது எனவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நிதியின மாநில அரசுகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார்.