
கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு மைதானத்தில் இருந்து வீடு திரும்ப உதவிக் கேட்ட பெண்ணை பாதுகாவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நடைபெறுவது போன்று ‘ஐ.பி.எல்’ போட்டிகள் பாகிஸ்தானிலும் ‘பி.எஸ்.எல்’ என்கிற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஏழாவது ஆண்டாக இப்போட்டிகள் அந்நாட்டில் நடைபெற்று வருகின்றன.
இதை நேரில் பார்க்க குடும்பத்தினருடன் லாகூரில் இருந்து கடாபி ஸ்டேடியத்துக்கு பெண் ஒருவர் வந்துள்ளார். போட்டி முடிந்துவிட்டு திரும்புகையில், அந்த பெண் குடும்பத்தினரை விட்டு விலகிச் சென்றுவிட்டார். அப்போது அருகிலிருந்த இரு பாதுகாவலர்களிடம் அவர் உதவி கேட்டுள்ளார்.
உடனடியாக அவர்களும் வழி காட்டுவதாக கூறி மறைவான இடத்துக்கு கூட்டிச் சென்று பெண்ணை வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது பெண் கூச்சிலடவே, அருகிலிந்த குடும்பத்தினர் ஓடி வந்து இளம்பெண்ணை மீட்டுள்ளனர். அங்கி இருந்து பாதுகாவலர்கள் தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடாஃபி காவல் நிலையத்தில் பெண் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




