ஆந்திராவில் அமைச்சராக பதவியேற்றியுள்ள நடிகை ரோஜா, இனி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களில் நடிக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். இதில் பல புதிய முகங்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் முதலமைச்சராகவும் உள்ள நடிகை ரோஜாவும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இதற்காக வெலகபுடியிலுள்ள சட்டமன்ற தலைமைச் செயலகத்தில் விழா நடத்தப்பட்டது. ரோஜா உட்பட மொத்தம் 24 அமைச்சர்கள் புதியதாக பதவியேற்றுக் கொண்டார். ஆந்திர மாநில ஆளுநர் விஸ்வ பூசன் ஹரிச்சரண் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதன்படி ஆந்திர மாநில சட்டசபையில் சுற்றுலாத்துறை அமைச்சராக நேற்று நடிகை ரோஜா பதவி ஏற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து பேசிய அவர், இனி சினிமாக்களிலும், தொலைக்காட்சிகளிலும் நடிக்க மாட்டேன். மகிழ்ச்சியாக உணர்கிறேன். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நன்றியுடன் இருப்பேன் என்று அவர் கூறினார்.