டெலிகிராம் செயலியில் சந்தாவுடன் கூடிய பல்வேறு ப்ரீமியம் தர திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவல் துரோவ் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் ஆப் போன்று தகவல் பரிமாற்ற தேவைக்காக உருவாக்கப்பட்டது தான் டெலிகிராம். வாட்ஸ் ஆப் செயலியை விடவும் இது மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக பயனர்களுடைய கருத்தாக உள்ளது.
தற்போது இந்த செயலியில் அனைத்து வசதிகளையும் பயனர்கள் இலவசமாக பெற்று வருகின்றனர். சில மேம்படுத்தப்பட்ட திட்டங்களை பெறுவதற்கு சந்தா கட்டும் திட்டத்தை விரைவில் டெலிகிராம் அறிமுகம் செய்யவுள்ளது.
இம்மாத இறுதிக்குள் புதிய மேம்படுத்தப்பட்ட திட்டங்களை பெறுவதற்கு டெலிகிராமிக்கு சந்தா செலுத்தும் திட்டம் அறிமுகமாகிறது. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவல் துரோவ், டெலிகிராம் ஏற்கனவே உள்ள அம்சங்களுக்கு கட்டணம் வசூலிக்காது. புதிய அம்சங்களுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.