உடலின் அதிக வெப்பம் காரணமாக சிலருக்கு உதட்டில் வறட்சி ஏற்படலாம்.
இதை தவிர்க்க,
*வெண்ணெயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
*இரவு படுக்கைக்கு செல்லும் முன் சிறிது வெண்ணெயை உதட்டில் தடவி வரலாம்.
*உஷ்ணத்தை குறைக்க மோரை அடிக்கடி குடித்து வரலாம்.
*உதடு சொரசொரப்பாக வறட்சியாக இருந்தால், தேனுடன், சர்க்கரையை சேர்த்து லேசாக உதட்டில் தடவி வரவும்.
*தண்ணீர் தேவையான அளவு குடித்து வாருங்கள்.
*நீர்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் & பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
*தேங்காய் எண்ணெய்/பாதாம் எண்ணெய்/கற்றாழை ஜெல் இவற்றில் ஒன்றை உதட்டின் மீது தடவி வரலாம்.
* இவ்வாறு செய்துவர உதடுகள் மிருதுவாகும்.