முதுகுவலியை போக்கும் ’வஜ்ராசனம்’

முதுகுவலியை போக்கும் ’வஜ்ராசனம்’

படத்தில் காட்டியவாறு ஒரு மடிப்பின் மீது அமர்ந்து கால்களை மடக்கி கால்கள் மீது வைத்துக்கொள்ளுங்கள். முதுகு நேராக இருக்க வேண்டும். உங்கள் நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் மெதுவாக காற்றை உள்ளிழுத்து வெளியேற்றுங்கள். கவனம் முழுவதும் சுவாசத்தில் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் 10-20 வினாடிகள் இந்த ஆசனத்தை செய்யலாம். பின் 5 நிமிடங்கள் இதே நிலையில் அமர்ந்திருக்க நல்ல பலன் தரும்.

முதுகுவலி போக்கும் வஜ்ராசனம் செய்வோம் (Vajrasana) - Annaimadi

பலன்கள்:

*மன அழுத்தம், பதற்றம் இவற்றை குறைக்கிறது.

*தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.

*செரிமானத்தை அதிகரிக்கிறது.

*உடல் எடையை குறைக்க உதவுகிறது.

* உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

*இடுப்பு பகுதி தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.

*முதுகுவலியை போக்குகிறது.

யாரெல்லாம் இதை செய்யக்கூடாது:

  • முழங்கால் வலி இருந்தாலோ, அறுவை சிகிச்சை செய்து இருந்தாலோ வஜ்ராசனம் செய்வதை தவிருங்கள்.
  • முதுகு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • முழங்கால் வலி உள்ளவர்கள் இதை செய்யக் கூடாது.

-பா.ஈ.பரசுராமன்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *