மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்தால் தனி கட்டணம் வசூலிக்கக் கூடாது என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர அரசுப் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும். அதன்மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும். மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் இந்த தேர்வை நடத்த முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து சேர்க்கை கட்டணம் உள்பட பல்வேறு கட்டணங்களை செலுத்தியுள்ளனர்.
தற்போது, தனியார் கல்லூரிகளில் சேர்க்கையை ரத்து செய்தால் தனியாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், சேர்க்கைக்கான கட்டணத்தை திருப்பி தரவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. மேலும், JEE, CUET தேர்வுகள் தாமதமாகியுள்ளன. இதன் காரணமாக மாணவர்கள் சேர்க்கை அக்டோபர் வரை நடைபெற வாய்ப்புள்ளது. இந்த நிலையில், அரசு சாராத பிற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தங்கள் சேர்க்கையை அக்டோபர் 31ம் தேதிக்குள் ரத்து செய்தால் அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித்தரவேண்டும் (கட்டணம்₹1,000க்கு மேல் இருந்தால்) என பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.