தமிழகத்தில் தண்டோரா அறிவிப்புக்கு தடைவிதித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் முக்கிய அறிவிப்புகள் தண்டோரா மூலம் அறிவிக்கும் வழக்கம் வெகுநாட்களாக இருந்து வருகிறது.வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை, அரசின் முக்கிய அறிவிப்புகள், விழிப்புணர்வு, சுகாதார மற்றும் மருத்துவ அறிவிப்புகள் போன்ற அறிவிப்புகள் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நிலையிலும் இந்த தண்டோரா அறிவிப்புகள் தொடர்கின்றன என்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வந்தன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தண்டோரா அறிவிப்பிற்கு தடைவிதித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட சூழலில் மக்களுக்கு அரசு கூறும் தகவல்களை தெரிவிக்க தண்டோரா போடும் நடைமுறை இனி தேவையில்லை. ஒலிப்பெருக்கிகள் மூலம் தகவல்களை தெரிவியுங்கள். மேலும், தடையை மீறி தண்டோரா போட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.




