அனைத்து விதமான மின்னணு சாதனங்களுக்கும் ஒரே சார்ஜரை பயன்படுத்துவது குறித்த ஆலோசனையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
டேப்லட், செல்போன், லேப்டாப் என அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் வெவ்வேறு சார்ஜரை பயன்படுத்தும் சூழல் உள்ளது. இதை தவிர்க்கும் விதமாக ஒரே சார்ஜரை பயன்படுத்துவது குறித்த தீவிர ஆலோசனையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.இதுதொடர்பான கூட்டம் ஆகஸ்டு 17ம் தேதி நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் செல்போன் தயாரிப்பாளர்கள், பிறதுறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே சார்ஜரை பயன்படுத்துவதன் மூலம் மின்னணு கழிவுகள் குறையும் என்று அரசு நம்புகிறது. ‘யுஎஸ்பி டைப் சி போர்ட்’ சார்ஜரை 2024க்குள் அறிமுகம் செய்வதை ஐரோப்பிய நாடுகள் கட்டாயமாக்கி உள்ளன. அமெரிக்காவும் இது போன்ற முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பொது சார்ஜரை அறிமுகப்படுத்த முடியும் எனில் நம்மால் ஏன் முடியாது? என பொது சார்ஜரை அறிமுகப்படுத்தும் முயற்சியில் மத்தியரசு ஈடுபட்டுள்ளது.