பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

இடுக்கி மாவட்டம் முக்குளி கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீசன், சுஜிதா தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுஜிதா (26) 3வது முறையாக கர்ப்பமானார். வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் கேட்டதற்கு உடல்பருமன் கூடிவிட்டதாக கூறியுள்ளார். இதற்கிடையே ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயக்கமடைந்து விழுந்தார்.
கணவர் சுதீசன் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். அப்போது அவருக்கு பிரசவம்(ஒரு மணி நேரத்திற்கு முன்பு|) நடந்து முடிந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தனக்கு குழந்தை பிறந்ததாகவும், வறுமையின் காரணமாக அதை பாத்ரூமில் உள்ள வாளியில் அமுக்கி கொன்றதாகவும் சுஜிதா தெரிவித்தார். பின்பு, வாளியில் இறந்து கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு சுஜிதாவை கைது செய்தனர்.




