தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சிக்கான விருது சேலம் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்த, அவற்றின் செயல்பாடுகள் அடிப்படையில், சுதந்திர தின விழாவில் ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சி மற்றும் மூன்று பேரூராட்சிகளுக்கு முதல்வர்விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சிறந்த மாநகராட்சிக்கான விருது, சேலத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் கிருஷ்ணராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
விருதுடன் பாராட்டு பத்திரம் மற்றும் விருதுதொகை ₹25 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதேபோல், சிறந்த நகராட்சிகளாக திருவில்லிப்புத்தூர், குடியாத்தம்,தென்காசிக்கும், சிறந்த பேரூராட்சிகளாக, கருங்குழி (செங்கல்பட்டு), கன்னியாகுமரி, சோழவந்தான் (மதுரை) ஆகியவற்றிற்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.




