சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையப்படுத்தி தி டர்டி பிக்சர் 2ம் பாகம் உருவாகிறது.
1980-1990ன் காலகட்டத்தில் ரசிகர்களை தன் வசீகரத்தால் ஈர்த்தவர் சில்க் ஸ்மிதா. பெரிய நடிகர்களை காட்டிலும் இவரின் கால்ஷீட்டுக்கு தவமாய் தவம் கிடந்த இயக்குநர்களும், புரொடியூசர்களுமே அதிகம். இன்று இவரின் இடத்தை ஒருவராலும் பூர்த்தி செய்யமுடியவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது. இவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் ‘தி டர்டி பிக்சர்’ என்ற படம் வெளிவந்தது. இதில் நடிகை வித்யாபாலன் சில்க் ஸ்மிதாவாக நடித்திருந்தார். இந்த படத்தை மிலன் லுத்ரா இயக்கி இருந்தார்.
படம் நன்றாக பேசப்படவில்லை என்றாலும்,வசூலை அதிகமாக குவித்தது. இந்த நிலையில், இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது.இதில் சில்க் ஸ்மிதாவின் இளம்வயது வாழ்க்கையை சொல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இதில் வித்யாபாலன் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.