மேக் இந்தியா நம்பர் 1 எனும் பிரசாரத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கியுள்ளார்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நாடுதழுவிய பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது. ’மேக் இந்தியா நம்பர் 1’ என்ற அந்த பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்,தொடங்கி வைத்தார். பின் டெல்லி டல்கத்தோரா விளையாட்டரங்கில் நடந்த பொதுநிகழ்ச்சியில் பேசினார்.
அவர் பேசியதாவது:நாட்டை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்றால் தற்போது ஆண்டுகொண்டிருப்பவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.கடந்த 75 ஆண்டுகளாக ஆண்டவர்கள் தங்கள் வீட்டையும், நண்பர்களையும் செல்வத்தால் வளப்படுத்தியதை தவிர வேறு எதையும் செய்யவில்லை. சிறந்த நிர்வாகத்தை முன்வைத்து தொடங்கியுள்ள இந்த பிரசாரத்தை மக்களிடன் கொண்டு சேர்த்து ஆதரவு திரட்டுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். மேலும், உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டுவர, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச & தரமான கல்வி, ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச மருத்துவம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு சம உரிமை மற்றும் கண்ணியம், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நியாயமான விலை ஆகியவற்றை உறுதிசெய்வதில் பொதுநிதியை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.