காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3,750 கி.மீ தூரம் பாரத் பாதயாத்திரை செல்லவுள்ளார்.
முதற்கட்டமாக, செப்டம்பர் 11ம் தேதி தமிழ்நாட்டில் பாறசாலா என்ற இடத்தில் இருந்து கேரளாவிற்குள் நுழைகிறார். அங்கு மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வரை 450 கி.மீ தூரம் கேரளாவில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். இதற்கு 19 நாட்கள் ஆகும்.
ராகுல் காந்தியுடன் செல்லும் அவரது 300 தொண்டர்களும் நாள் ஒன்றுக்கு 25 கி.மீ தூரம் நடப்பார்கள். காலை 7-10 மணிவரையிலும், மாலை 4-7 மணிவரையிலும் நடைபயணம் செல்கிறார். இடைபட்ட நேரத்தில், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், இளைஞர்கள், மீனவ, விவசாயக் குழுக்கள், ஏழைகளை சந்திக்கிறார்.
இந்த நடைபயணத்தின் போது நாட்டின் பிரச்சனைகள், மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகள் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறுகிறார்.