தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (27.08.2022) தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல்,ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடற்கரை, தென்மேற்கு வங்க கடல்பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




