பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தேசியக்கொடியை கையில் வாங்க மறுத்த வீடியோ பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இந்தியா,பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியகோப்பை டி20 போட்டி நேற்று நடந்தது. இதில்,இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்த வெற்றியை ரசிகர்கள் நாடுமுழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று வெற்றிக்கொண்டாட்டத்தின் போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா கையில் தேசியக்கொடியை வாங்க மறுத்த வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இதுவே பாஜக அல்லாத ஒரு நபர் இவ்வாறு செய்திருந்தால் தேசிய விரோதி என முத்திரை குத்தப்பட்டிருப்பர் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.